சந்திரகிரகணம் 2011

Saturday, 10 December 2011

சந்திரகிரகணம் 2011


lunar eclipse june 2011 -- from Space.com
எந்த நேரம் நல்ல நேரம் , எந்த நேரம் மோசமான நேரம் என்று அறிந்து கொண்டு, அதை  பயன்படுத்த தெரிந்தாலே போதும்.. வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இன்னைக்கு பார்க்க விருப்பது - இரண்டு அபூர்வ நாட்களைப் பற்றி...

பொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்த  உணவு என்று இல்லை -  நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது  இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...

பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..?

மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ... 

எங்கள் ஊரில் கிரகண நேரத்தில் - உலக்கையை நிற்க வைப்பார்கள். கொட்டுக்கூடை என்று சிறிய வெண்கலப் பாத்திரம் ஒன்று இருக்கும். அதில் நல்லெண்ணையை ஊற்றி - உலக்கையை நிறுத்தி வைப்பார்கள். கிரகண நேரத்தில் அந்த உலக்கை அப்படியே நெட்டுக் குத்தாக நிற்கும்.  மற்ற நேரங்களில் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. சிறிய வயதில் , எங்கள் கிராமத்தில் நானே பல தடவை பார்த்து இருக்கிறேன்... (கொட்டுக் கூடையை விடுங்க... உலக்கையே இப்போ இருக்கிற தலை முறைக்கு தெரியுமான்னு தெரியலை...) 

கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...

கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!
சரி , இது எல்லாம் இன்னைக்கு எதுக்கு சொல்றேன்னு கேட்குறீங்களா? 
இன்றைக்கு சந்திர கிரகணம்....

இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும். முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. 

இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். 

சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று , இறைவனை வழிபட்டு  அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

கிரஹண தோஷ பரிகார ஸ்லோகம் : 
இந்த்ரோ[அ]நலோ தண்டதரஸ்ச ருக்ஷ:பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:

குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.
===============================================

இந்த கிரகண நேரத்தில் - மந்திர ஜெபம் செய்வது மிக மிக உகந்தது. உங்களுக்கு அது அளப்பரிய பல நற்பலன்களை தரும்....

ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கும் , ஜெபித்து இடையில் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து ஜெபிக்க முடியாமல் போனவர்கள் - இன்றைய கிரகண நேரத்தை அவசியம் பயன் படுத்திக் கொள்ளுங்கள்....

சனிக்கிழமை , வீக் எண்ட் ... ஒஸ்தி மாமூ.....ன்னு , வழக்கம் போல செய்ற பார்ட்டி சமாச்சார வேலைகளை எல்லாம் , இன்னைக்கு செய்யாம இருக்கிறது , கறி மீன்  சாப்பிடாம இருப்பது - சாலச் சிறந்தது..

வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்...!

Reactions:

0 comments :

Post a Comment