திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்!
கார்த்திகை ஜோதியாக திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலையில் ஐந்து தீபம்
உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை "இறைவன் ஒருவனே!' என்று
தத்துவங்கள் கூறுகின்றன. அந்த ஒருவனுக்கு பெயர் ஏதும் இல்லை. ஊரும் இல்லை. எங்கும்
இறைவன் நிறைந்து விளங்குகிறான்.
இதனை வலியுறுத்தும் வகையில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் முன்னிலையில் திருக்கார்த்திகையன்று அதிகாலை
வேளையில் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதியை ஏற்றி தீபாராதனை செய்வர்.
இத்தீபம் " பரணி தீபம்' என்று
பெயர்பெறும். கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய பரணி நட்சத்திரத்தில்
ஏற்றப்படுவதால் இந்த தீபத்தை "பரணி தீபம்' என்கிறார்கள். பிறகு அந்த
கற்பூரச்சுடரொளி ஒரு பெரிய ஒற்றைத் திரியில் பொருத்தப்பட்டு, நந்தீஸ்வரர்
முன்னிலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் ஏற்றப்படும்.
ஒற்றை தீபம் ஒன்றாக இருக்கும்
கடவுளையும், ஐந்து தீபங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும்
ஐந்து தொழில்களையும் அவர் மேற்கொள்ள பஞ்சமூர்த்திகளாகப் பிரிவதையும் காட்டும்.
இவர்கள் தங்கள் பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும் வகையில் அம்மன்
சன்னதியில் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.
திருவண்ணமாலையில் திருக்கார்த்திகை அன்று மாலையில் ஏற்றப்படும் தீபம் கார்த்திகை தீபமாகும்.
தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் ஊர்வலமாக வருவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இவரது பவனி நடப்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பஞ்சமூர்த்தி சன்னதிகளில் ஏற்றிய ஐந்து தீபங்கள், அம்மன்சன்னதியில் ஏற்றிய ஐந்து தீபங்களும் ஆக பத்து தீபங்களும் சுவாமியின் முன்னால் சுமந்து வரப்படும்.
கொடிமரத்திற்கு முன்புள்ள
அகண்டத்தில் (தீச்சட்டி) இதை ஒன்று சேர்ப்பர். ஒன்றாக இருக்கும் தெய்வத்தால்
உருவாக்கப்பட்ட அனைத்தும் அந்த தெய்வத்திடமே திரும்பவும் ஒடுங்கும் என்பதைக்
குறிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படும்.
அப்போது மலையுச்சியில் கார்த்திகைஜோதியாக அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். அன்னை உமையவள் அண்ணாமலையில் தவம் செய்ததன் பயனாக சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதனால் சிவனும் சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உண்டானது. அத்திருக்கோலம் தோன்றிய நேரமே கார்த்திகை மாத கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம்.
தீபமேற்றும் போது பாடும் பாடல்அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் முருகப்பெருமானின் புகழ்பாடும் நூல்களில் சிறப்பானது. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்பர். இறைவனே தீபச்சுடரொளியாக இருந்து நாம் வேண்டியவற்றை தந்து அருள் செய்கிறான்
. சாதாரணமாக ஓரிடத்தில் ஏற்றும்
விளக்கு புறஇருளைப் போக்கும். ஆனால், திருவிளக்காக கோயிலிலோ அல்லது பூஜை அறையிலோ
ஏற்றும் தீபம் நம் புற இருளுடன் மனஇருளையும் போக்கும் சக்தி கொண்டது. அதனால் தான்
முருகனைப் போற்றும் அருணகிரிநாதர் பழநித்திருப்புகழில் "தீபமங்கள ஜோதீ நமோநம' என்று
தீபச்சுடரை முருகப் பெருமானாகவே போற்றி வணங்குகிறார். அதனால் திருக்கார்த்திகை
தீபமேற்றும்போது "
"தீபமங்கள ஜோதீ நமோநமதூய
அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்''
என்று பாடி தீபமேற்ற வேண்டும்.
"தீபமங்கள ஜோதீ நமோநமதூய
அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்''
என்று பாடி தீபமேற்ற வேண்டும்.
0 comments :
Post a Comment