குபேர கிரிவலம்
குபேர கிரிவலம்
22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.(நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஒரு வருடம் வரையிலும் அன்னதானம் நாம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ,அதே புண்ணியம் காசியில் ஒரு நாள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்கு சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஒரு வருடம் வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
துவாதசி திதியன்று நாம் அண்ணாமலையில் மூன்று வேளைகளுக்கும் தலா ஒரே ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்தால்,ஒரு நாளுக்கு 1,00,00,000 பேர்கள் வீதம்,நமது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்;மேலும் அவ்வாறு அன்னதானம் செய்தவருக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.
நடைமுறையில் பார்த்தால்,நாம் நமது முந்தைய ஐந்து தலைமுறை(நமது அம்மா+அப்பா; அவர்களின் பெற்றோர்கள்;அவர்களின் பாட்டி+தாத்தாக்கள்;அவர்களின் பாட்டி தாத்தாக்களின் பெற்றோர்கள்)களில் செய்த புண்ணியத்தையும்,பாவத்தையும் அனுபவிக்கிறோம்.அவர்கள் செய்த புண்ணியத்தின் விளைவாக நமக்கு இந்த வேலை,இந்த வீடு,இவ்வளவு கவுரவம் கிடைத்திருக்கிறது.அவர்கள் செய்த பாவங்கள் அல்லது அக்கிரமங்களின் விளைவாக நாம் ஏதாவது ஒரு குறையோடு இருக்கிறோம்.இந்த குறையை சரி செய்யவே,துவாதசி திதியன்று அண்ணாமலைக்கு அன்னதானம் செய்ய அழைக்கிறேன்.இவ்வாறு அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்ததால்,நீங்கள் உங்களது ஊருக்குத் திரும்பியதும்,உங்களது எந்த பிரச்னை எப்படி தீர்ந்தது என்பதை எனக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.
22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று காலை 6 முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12 முதல் 2 மணிக்குள்ளும், இரவு 7 முதல் 8 மணிக்குள்ளும் அன்னதானம் செய்வோம்;எனது நேரடி வழிகாட்டுதல் கட்டாயம் இருக்கும்.
மறுநாள்,23.11.11 புதன் கிழமையன்று குபேர பகவான் சூட்சுமமாக நமது பூமிக்கு வரும் நாளாகும்.இன்று மாலை 4 மணிக்கு நாம் மஞ்சள் ஆடைஅணிந்து, குபேரலிங்கத்தில் சங்கமிப்போம்.(குபேர பகவான் இந்த நேரத்தில் மாலை 4மணி முதல் 6 மணி வரையிலும் சூட்சுமமாக குபேர லிங்கத்தில் பூஜை செய்கிறார்.அந்த பூஜையில் கலந்து கொள்வோம்.மாலை 6 மணிக்கு மேல்,குபேரலிங்கத்திலிருந்து குபேர பகவானே கிரிவலம் செல்கிறார்.நாமும் அதே நேரத்தில் கிரிவலம் செல்வதன் மூலமாக, குபேர சம்பத்து கிடைக்கும்.)அப்படி வரும்போது நாம் கொண்டு வரவேண்டியது:
ஐந்து முக ருத்ராட்சங்கள் இரண்டு=கிரிவலத்தின்போது இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்துக்கொண்டு ,மனதிற்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டு செல்ல வேண்டும்.
சுமார் ரூ.300 முதல் ரூ.500 வரையிலான ரொக்கப்பணம்;மாலை 6 மணிக்கு குபேர லிங்கத்திலிருந்து புறப்பட்டு,ஈசான லிங்கத்தைக் கடந்ததும் அண்ணாமலை நகரப்பகுதி வந்துவிடும்.அப்போது ஐந்துகிலோ நவதானியங்களைக் கொண்ட பாக்கெட்டுகளையும், ஒரு கிலோ டையமண்டு கல்கண்டு பாக்கெட்டையும் வாங்கிக் கொள்வோம்.மேலும் நூறுகிராம் நெய் பாக்கெட் பத்து வாங்கிக் கொள்வோம்.
அவ்வாறு வாங்கிக் கொண்டு,கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம்,அக்னி லிங்கம் என கடந்தததும்,மனித காலடி படாத சாலையோரப்பகுதிகள் வந்துவிடும்.அப்படி வந்ததும்,நாம் கொண்டு வரும் நவ தானியங்களை கிரிவலப்பாதையோரங்களில் இருக்கும் புதர்களுக்குள் அல்லது வெட்ட வெளியில் தூவுவோம்.அது காலியானதும்,டையமண்டு கல்கண்டையும் தூவுவோம்.தற்போது மழைக்காலமாக இருப்பதால்,நாம் தூவும் நவதானியங்கள் விரைவாக முளைக்கத்துவங்கிவிடும்.அப்படி முளைக்கத்துவங்கியதும்,நவக்கிரகங்களால் நமக்கு ஏற்பட்ட,ஏற்பட்டுக்கொண்டிருக்கும்,ஏற்படவிருக்கும் பாதிப்புகள் அடியோடு விலகிவிடும்.டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ வரை நாம் தூவியிருப்போம்.அதை எறும்புகள் எடுத்துச் சென்று தனது அறைகளில் சேமிக்கும்.இதன் மூலமாக நமக்கு இரண்டு விதமான புண்ணியங்கள் கிடைக்கும்.ஒன்று: ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி பாதிப்புகள் வராது.இரண்டு= ஒரு கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்த பலன்கள் நம்மை வந்துசேரும்.
ஒவ்வொரு லிங்கத்தின் சன்னதியிலும் நாம் கொண்டு வரும் நூறு கிராம் நெய் பாக்கெட்டுகளை அங்கிருக்கும் பூசாரியிடம் ஒப்படைப்போம்.நாம் தானமாக தரும் நெய்யானது அஷ்டலிங்கங்களின் கருவறையில் தீபத்துக்கு எரியத்துவங்கியதும்,நமது குடும்பப்பிரச்னைகள்,கர்ம வினைகள் கரைந்துவிடும்.
குபேர கிரிவலம் நள்ளிரவில் 12 மணி அல்லது 1 மணியளவில் நிறைவடையும்.குபேரலிங்கம் வந்தடைந்ததும்,வாகனம் பிடித்து நமது இருப்பிடத்தைச் சென்றடைவோம்.
விடிந்தால் 24.11.11 வியாழன்+ அமாவாசை!! காலையில் நேராக நமது வீட்டிற்குச் செல்லுவோம்.(வேறு எந்த கோவிலுக்கும்,எவரது வீட்டுக்கும் சென்றால்,குபேரகிரிவலம் சென்றதன் பலன் நமக்குக் கிடைக்காது.இப்படித்தான் 2009 இல் குபேரகிரிவலம் முடித்து,எனது உறவினர்களின் வீடுகள் சென்னையில் இருக்கிறது என்று அங்கு போய்விட்டேன்.ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிட,அந்த வருடம் முழுவதும் நான் எதிர்பார்த்த நற்பலன்கள் எனக்குக் கிடைக்கவில்லை)வீட்டிற்குப் போன பின்னர்,வழக்கம் போல,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவோம்.
பாம் ஒன்று: செயல் மூன்று என்பதைப் போல,நாம் இவ்வாறு செய்யும் சில செயல்களால் 2012 குபேர கிரிவலநாள் வரும் முன்பாகவே, நமது வேலையில் சம்பள உயர்வும்,பதவி உயர்வும் கிடைத்திருக்கும்;நாம் செய்யும் தொழிலில் நாம் எதிர்ப்பார்த்ததை விடவும் வளர்ச்சி கிடைத்திருக்கும்;நீண்டகாலக் கடன்கள் தீர்ந்திருக்கும்;நமக்கு வர வேண்டிய வராக்கடன்கள் வசூலாகியிருக்கும்;குடும்பத்தில் இதுவரையிருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்திருக்கும்.குபேர சம்பத்து பெறுவதற்கு நம்மை இந்த குபேர கிரிவலம் வருவதன் மூலமாக சூட்சுமமாக தயார் செய்துவிடுவார்.
2007ஆம் ஆண்டில் நானும் எனது தம்பியும் குபேரகிரிவலத்துக்கு வந்தோம்.எனக்கு சொந்தத் தொழில் அமைந்தது;எனது தம்பி ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தான்;
2008 ஆம் ஆண்டில் என்னுடன் நான்குபேர்கள் வந்தனர்.ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பொருளாதார சுயச்சார்பினை எட்டினர்.
2009 ஆம் ஆண்டில் என்னுடன் 12 பேர்களும்,இந்த 12 பேர்களால் சுமார் 30 பேர்களும் குபேர கிரிவலம் வந்தார்கள்.இந்த 42 பேர்களும் நிச்சயமாக ஏதாவது ஒரு முன்னேற்றத்தை எட்டியிருப்பர்.இவர்கள் அனைவரையும் இது தொடர்பாக அவர்களின் முன்னேற்றத்தை விசாரிக்க முடியவில்லை;
2010 ஆம் ஆண்டில் என்னுடன் ஆறுபேர்கள் வந்தார்கள்.இவர்களால் சுமார் 100 பேர்கள் குபேர கிரிவலத்துக்கு வருகை தந்தனர்.இவர்களில்ஒரு சிலரே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வந்திருந்தனர் என்பதை நேரில் உணர்ந்தேன்.எனவே,இந்த ஆண்டில் குபேர கிரிவலம்,அண்ணாமலை அன்னதானத்தின் பெருமைகள்ஸ்ரீ தோஷத்தின் விளைவுகள்,பித்ரு தோஷம்,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் வலிமை,மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் வரலாறு போன்ற தலைப்புகள் 22.11.11 அன்றும் ,23.11.11 அன்றும் அண்ணாமலையில் திருவூடல் தெருவில் இருக்கும் நாடார் மடம் ஒன்றில் விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்.நாம் அனைவரும் பணக்காரர்கள் ஆனாலே,இந்தியா பணக்கார நாடாக ஆகிவிடும்.
தேவரகசியமான குபேர கிரிவலம் பற்றிய உண்மை: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரக்கூடிய தேய்பிறை சிவராத்திரியன்று வானுலகிலிருந்து,மண்ணுலகிற்கு செல்வத்தின் அதிபதியாகிய குபேர பகவான் வருகிறார்.அன்றைய பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலும் அவர் ஸ்தாபித்த குபேர லிங்கத்துக்கு பூஜை செய்கிறார்.இந்த பூஜையில் நாம் கலந்து கொள்ள வேண்டும்.மாலை 6 மணிக்கு மேல் குபேரலிங்கத்திலிருந்து குபேர பகவான் கிரிவலம் செல்கிறார்.நாமும் அவருடன் கிரிவலம் செல்வதால்,அண்ணாமலை அருளும்,சித்தர்கள் ஆசியும் குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்.
ஐயா,இந்த ஆண்டு(2012) குபேர கிரிவலம் எப்போது.
ReplyDeleteiya intha year 2014 kupera kirivalam eppothu
ReplyDelete