BSNL NEW OPPERTUNITY
சிம்கார்டில் பேசும் புதிய போன்:அறிமுகப்படுத்தியது பி.எஸ்.என்.எல்., |
ஜூலை 16,2011,09:29 |
ஜி.எஸ்.எம்., வகையை சேர்ந்த 'பிக்சேர்டு ஒயர்லெஸ்' (எப்.டபிள்யு.டி.,) போன் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனில், மொபைல் சிம்கார்டு பொருத்தி பேச முடியும். லேண்ட்லைன் மாதிரி உபயோகிக்கும் முறை உள்ளதால், வயதானோர் எளிதாக கையாள முடியும். மெசேஜ், யு.பி.எஸ்., கேபிள் வசதி இருக்கிறது. இதன் விலை 1,450 ரூபாய். கேபிள் வசதி இல்லாத இடம், கிராம பகுதி, மொபைல் போன் டவர் பிரச்னை உள்ள இடங்களில் எப்.டபிள்யு.டி., பயன்படுத்தலாம். அன்பு ஜோடி பிளான், நேசம் லைப்டைம் பிரிபெய்டு, ரக்ஷக் பிளான் என, பல பிரிபெய்டு திட்டங்கள் உள்ளன. புதிய திட்டங்களுக்கான ரீசார்ஜ் கூப்பன்கள், எல்லா சில்லரை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். குமரகுரு கல்லூரி, கல்கி தெரு, மத்திய பஸ் ஸ்டாண்ட், எச்.என்.வி.எஸ்.லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் 3ஜி; உக்கடம், பொள்ளாச்சி (கே.சீ.பீ.,), கரட்டுப்பாளையம் பகுதியில் புதிதாக 2ஜி டவர் அமைக்கப்பட்டுள்ளது. கோவை டைட்டில் பார்க், காளப்பட்டி, திருப்பூர் ஆகிய இடத்தில் புதிய தொலைபேசி நிலையம், ஒயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கு புதிய டவர்கள் நிறுவப்பட உள்ளன. இவ்வாறு, ஹரிபாபு கூறினார். கோவை பொதுமேலாளர் சுனிதா, துணை பொதுமேலாளர் (திட்டம்) நாகராஜு, துணை பொதுமேலாளர் (மார்க்கெட்டிங்) வெங்கட்ராமன் உடனிருந்தனர். |
0 comments :
Post a Comment