பிளஸ் 2 உடனடி தேர்வு 25ம் தேதி ரிசல்ட்!
சென்னை : கடந்த ஜூன் மாதம் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் 25ம் தேதி பிற்பகல் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.pallikalvi.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.inஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். தனித் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல்களை 29ம் தேதி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பிற்பகல் நேரத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேற்கண்ட உடனடித் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 26 முதல் 28 வரை அனைத்து முதன்மைக் கல்வி அலவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வாங்க விரும்புவோர், ‘அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை&6’ என்ற பெயரில் டிடி எடுத்து சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 28ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

0 comments :
Post a Comment