பத்மநாபசாமி கோயில்

Saturday, 16 July 2011

பத்மநாபசாமி கோயில்


திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகளில் கிடைத்த பொக்கிஷத்தை பாதுகாக்க, வெடிகுண்டால் கூட தகர்க்க முடியாத இரும்பு அறையை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகளில் கிடத்த தங்க குவியல்களை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாமல் கேரள அரசு திணறி வருகிறது. கோயிலுக்கு தற்போது அளிக்கப்படும் பாதுகாப்பு பற்றி அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, கேரள அரசு அமைத்த நிபுணர் குழு, கோயில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், அதிநவீன ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், லேசர் சென்சார்கள், வெடிகுண்டு வைத்தால் கூட தகர்க்க முடியாத இரும்பு அறைகள் அல்லது கான்கிரீட் அறைகள், கோயில் அருகே சுரங்கப்பாதை தோண்ட முயற்சித்தால் கண்டுபிடிக்க கூடிய அதிநவீன கருவிகளை கோயிலில் அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இப்போதைய பட்ஜெட்டில் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதால், கோயிலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment