2011

Friday, 23 December 2011


தமிழ் இதயங்களுக்கு வணக்கம்

கடந்த பனிரெண்டு நாட்களாக எந்த செய்தியும் பிரசுரம் பண்ண இயலாமைக்கு வருந்துகிறேன். மூன்று நாட்கள் சபரிமலை யாத்திரை மற்றும் பல அலுவலக பணிகள் மேலும் சொந்த வேலைகள் என பளு அதிகமானதால் பிரசுரம் பண்ண இயலவில்லை. எனவே இனி வரும் நாட்கள் பல சிறப்பான தேடுதல்களுடன் நமக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் செய்திகளுடன் உங்களை சந்திக்க இருக்கிறேன். இவ் வலை தளத்திற்கு பார்வையாளர்கள் அதிகமாவது எனக்கு ஒரு புத்துணர்ச்சி உருவாகி உள்ளது.ஆகவே, பல அரிய தவல்கள் திரட்ட முனைந்துள்ளேன். இன்னும் சிறப்பான செய்திகளை உங்களுக்கு வழங்க தயாராக உள்ளேன். வாசக நெஞ்சங்கள் அனைவரும் எனக்கு தங்களின் மேலான ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் தவறாமல் பதியுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரு மாநிலங்களுக்கும் இடையே   முல்லை பெரியாறு அணை பிரச்சினை நடக்கும்போதே  சபரிமலை யாத்திரை  சென்று வந்தது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் .ஆகவே தான் இன்றைய பதிப்பாக முல்லை பெரியாறு அணை வரலாறை உங்களுக்கு வழங்கி இருக்கிறேன்.


என்றும் தமிழன்புடன்

ஆர் டி ஆர் .  


முல்லை பெரியார் அணை வரலாறு

1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல்இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும்மதுரைஇராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.
இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான்
முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனிதிண்டுக்கல்மதுரை,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
தன் குடும்ப சொத்தை விற்று அணை கட்டிய கர்னல் பென்னி குக் எங்கே ?
இன்று சுயநலத்துக்காக அரசியல் பண்ணும் அரசியல்வாதி எங்கே? 

Monday, 12 December 2011

கிறிஸ்துமஸ் திருவிழா





                     

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களின் துயர் துடைக்கஇறைவன் மண்ணில் அவதரித்தார். பல அற்புதங்களை நிகழ்த்தினார். தம்மை சிலுவையில் அறைந்தபாவிகளையும் கருணை கூர்ந்து மன்னித்தார். இறந்த 3-ம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்து விண்ணுலும் ஏகினார். அவர் தான் இயேசு கிறிஸ்து.
இயேசுகிறிஸ்தவர்களின் கடவுள். ஆனாலும் அவருக்கு சாதி மத பேதம் கிடையாது. இன்றும் பலர் சாதி மத பேதமின்றி இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமசை கொண்டாடி        வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் விழாவைப் பற்றிய சில தகவல்களும்அதன் பின்னணி நிகழ்வுகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
கிறிஸ்துமஸ் என்பது உலகம் முழுதும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
இயேசு அவதரித்த நாளே கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். இயேசுடிசம்பர் மாதம் 25-ம் தேதிதான்பிறந்தாரா என்பது குறித்து சில சந்தேகங்களும் நிலவுகிறது. அவர் டிசம்பர் 25-ம் தேதிதான் பிறந்தார் என்பது குறித்து நிச்சயமாக யாரும் உறுதியாககூறுவதில்லை.
பண்டைய காலத்தில் டிசம்பர் மாதம் 25-ம் தேதி பெகன்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்விருந்துண்டு கேளிக்கைகளில் ஈடுபடும்நாளாக இருந்ததால்அன்றைய தினம் விடுமுறை தினமாக இருந்தது. அவர்கள் இயேசுவையும் நம்புவதில்லை.
3-வது நூற்றாண்டின் போது ரோம் நகர பிஷப்பாக டெலஸ்போரஸ் என்பவர் இருந்தபோது டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடமுடிவு செய்யப்பட்டது. இது நடைபெற்றது கி.பி. 127 ஆண்டுக்கும் கி.பி. 139-ம் இடைப்பட்ட பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது,
இயேசுவின் பிறந்த நாள் குறித்து பல் வேறு கருத்துக்கள்மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்த நிலையில்ரோம் நகர சர்ச் டிசம்பர் மாதம்25-ம் தேதியை கிறிஸ்து பிறந்ததினமாக கொண்டாடுவது என முடிவு செய்தது. இந்த முடிவு கி.பி. 310-ம் ஆண்டுஎடுக்கப்பட்டது.
பல தலைமுறைகளாக கீழை நாடுகளின் சர்ச்சுகளால் இது ஒப்புக்கொள்ளப்படாமல்இருந்தாலும் 5-ம் நூற்றாண்டில்தான் உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதல் கிறிஸ்துமஸ் எப்போது ?File:Giorgione 014 crop.jpg
5-ம் நூற்றாண்டில் கிறிஸ்து பிறந்த நாள் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரோம் நகரில்இயேசு பிறந்த தேதிஆண்டு குறித்து மீண்டும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால்இதற்கு முன்பே இயேசுவின் சீடரான மத்தேயுவின் போதனைகளில் இயேசுஹீரோட்மன்னன் காலத்தில் பெத்தலஹேமில் பிறந்தார் என கூறியிருந்தார்.
ஹீரோட் மன்னர் இறந்ததற்கும் இயேசு கிறிஸ்து பிறந்ததற்கும் இடையே சில காலஇடைவெளி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எங்குமே இயேசு கிறிஸ்து எந்த ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை.அவர் ஏ.யு.சி. 747-ன் மத்திய பகுதியிலோஅல்லது ஏ.யு.சி749-ம் ஆண்டின்இறுதியிலோ பிறந்திருக்கலாம். (ஏ.யு.சி. என்பது அன்னா உர்பிஸ் காண்டிடா,அதாவதுரோம் நகரம் உருவானதிலிருந்து கணக்கிடப்படுவது). கி.மு.7-ம்நூற்றாண்டுக்கும்கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இயேசுபிறந்திருக்கலாம் என்பதே சரியான கணிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பெஜன்கள் விழா மார்ச் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. அந்த நாளைகிறிஸ்தவர்கள்கேப்ரியல் தேவதை மேரிமாதாவை வந்து பார்த்த நாளாககொண்டாடுகிறார்கள். அதனுடன் மாதங்கள் சேர்த்து டிசம்பர் மாதம் 25-ம் தேதிஇயேசு கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
தற்போது கிடைக்கும் பல தகவல்களின் படி கிறிஸ்துமஸ் முதலில் கொண்டாடப்பட்டவருடம் கி.பி. 534-ம் ஆண்டு என தெரியவந்துள்ளது.

இயேசுவின் தரிசனம்…


 இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் அவரைப் பார்ப்பதற்காக கிழக்கு பகுதியிலிருந்து இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காக சாஸ்திரிகள்ஜெருசலேம் நகருக்கு வந்தனர்.
கிழக்குப் பகுதியில் உதித்த நட்சத்திரத்தைப் பார்த்து அவர்கள் இயேசு பிறப்பை உணர்ந்தனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன்ஏரோது மன்னன்அதிசயித்தான். ஜெசருசேலம் நகர மக்களும் அதிசயித்தார்கள்.
இயேசு எங்கு பிறந்திருப்பார் என அறிய வேத ஆச்சாரியர்களைக் கூப்பிட்டு ஏரோது மன்னன் விசாரித்தான். அதற்கு அவர்கள்,பெத்தலஹேமில் பிறப்பார்என தீர்க்கதரிசிகள் கூறியதாக சொல்லவும்சாஸ்திரிகளை அழைத்து இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதை பார்த்து விட்டு வருமாறும்வந்து என்னிடம்சொல்லுமாறும் கூறி அனுப்பி வைத்தான்.
இதைத் தொடர்ந்து விண்ணில் தோன்றிய நட்சத்திரம் வழி காட்ட அதை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.
நட்சத்திரம் அவர்களை இயேசு பிறந்த வீட்டின் முன் இட்டுச் சென்றது. அங்கு மரியாளின் மடியில் கருணையே உருவாக தவழ்ந்து கொண்டிருந்தார் இயேசு பிரான்.குழந்தை இயேசுவையும்மரியாளையும் வணங்கி தாங்கள் கொண்டு சென்றிருந்த பொன்னையும்,பொக்கிஷங்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.
கிறிஸ்துமஸ் திருவிழா 
டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் தம் கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். திருப்பலியின்போது கிறிஸ்து பிறப்புவிழாவின் பொருள் என்ன என்பது மறையுரை வழியாக விளக்கப்படும். ஒவ்வொரு கோவிலிலும் கிறிஸ்துமஸ் குடில் செய்து வைக்கப்பட்டிருக்கும். வீடுகளிலும் குடில் செய்து வைக்கும் பழக்கம் உண்டு. அக்குடிலில் குழந்தை இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். கூடவே, இடையர்கள், இடையைச் சார்ந்த ஆடுகள், தொழுவத்தில் மாடு, கழுதை போன்ற உருவச்சிலைகளும் இடம்பெறும்.

வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள்.

கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

Saturday, 10 December 2011

சந்திரகிரகணம் 2011


lunar eclipse june 2011 -- from Space.com
எந்த நேரம் நல்ல நேரம் , எந்த நேரம் மோசமான நேரம் என்று அறிந்து கொண்டு, அதை  பயன்படுத்த தெரிந்தாலே போதும்.. வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இன்னைக்கு பார்க்க விருப்பது - இரண்டு அபூர்வ நாட்களைப் பற்றி...

பொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்த  உணவு என்று இல்லை -  நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது  இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...

பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..?

மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ... 

எங்கள் ஊரில் கிரகண நேரத்தில் - உலக்கையை நிற்க வைப்பார்கள். கொட்டுக்கூடை என்று சிறிய வெண்கலப் பாத்திரம் ஒன்று இருக்கும். அதில் நல்லெண்ணையை ஊற்றி - உலக்கையை நிறுத்தி வைப்பார்கள். கிரகண நேரத்தில் அந்த உலக்கை அப்படியே நெட்டுக் குத்தாக நிற்கும்.  மற்ற நேரங்களில் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. சிறிய வயதில் , எங்கள் கிராமத்தில் நானே பல தடவை பார்த்து இருக்கிறேன்... (கொட்டுக் கூடையை விடுங்க... உலக்கையே இப்போ இருக்கிற தலை முறைக்கு தெரியுமான்னு தெரியலை...) 

கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...

கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!
சரி , இது எல்லாம் இன்னைக்கு எதுக்கு சொல்றேன்னு கேட்குறீங்களா? 
இன்றைக்கு சந்திர கிரகணம்....

இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும். முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. 

இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். 

சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று , இறைவனை வழிபட்டு  அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

கிரஹண தோஷ பரிகார ஸ்லோகம் : 
இந்த்ரோ[அ]நலோ தண்டதரஸ்ச ருக்ஷ:பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:

குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.
===============================================

இந்த கிரகண நேரத்தில் - மந்திர ஜெபம் செய்வது மிக மிக உகந்தது. உங்களுக்கு அது அளப்பரிய பல நற்பலன்களை தரும்....

ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கும் , ஜெபித்து இடையில் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து ஜெபிக்க முடியாமல் போனவர்கள் - இன்றைய கிரகண நேரத்தை அவசியம் பயன் படுத்திக் கொள்ளுங்கள்....

சனிக்கிழமை , வீக் எண்ட் ... ஒஸ்தி மாமூ.....ன்னு , வழக்கம் போல செய்ற பார்ட்டி சமாச்சார வேலைகளை எல்லாம் , இன்னைக்கு செய்யாம இருக்கிறது , கறி மீன்  சாப்பிடாம இருப்பது - சாலச் சிறந்தது..

வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்...!

Friday, 9 December 2011

சனிபெயர்ச்சி திருநள்ளாறு


சனி தோஷ நிவர்த்தி தரும்  ஸ்ரீ சனீஸ்வரர்!
Sani
நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்ல
ை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். 

இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்; விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.

திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் "ஈசுவர பட்டம்" பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

அமைவிடம் : 

காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம்,காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.

திருநள்ளாறு :

இத்தலம் தர்ப்பாரண்யம் என்றும், பிறகு நகவிடங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது திருநள்ளாறு எனப் போற்றப்படுகிறது. நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

இங்குள்ள திருக்குளத்தில் சனி நீராடி சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனிபகவானுடைய பாதிப்புகள் நீங்கி நலம் பல உண்டாகும்.

சனியால் பாதிக்கப்பட்ட நளன் :

சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து,எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும்,குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள்.

நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் தெரியவருகிறது. சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்ததால் நளமகராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியதாம்.

"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன்" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார். 

நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.