சேலம், விழுப்புரம் பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதி

Friday, 12 August 2011

சேலம், விழுப்புரம் பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதி



சேலம், விழுப்புரம்  பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதிசேலம், விழுப்புரம் பகுதிகளில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதி
சேலம், ஆக 12: இன்று முற்பகல் 11.45 மணி அளவில் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், திட்டக்குடி பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
சுமார் 20 விநாடிகள் இந்த நில அதிர்வு நீடித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நில அதிர்வால் அச்சம் அடைந்த மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பாக சாலையோரங்களில் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கடலூர் மாவட்டம் பெண்ணாடம், திட்டக்குடி,  பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment