04/01/2012 - 05/01/2012

Monday, 30 April 2012

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -








பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.

அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.
அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.
பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.
இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.
இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.
படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.
அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.
மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.
பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.
திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.
பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.
வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.
உட்பிராகாரத்தில் கற்பக வினாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.
தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.
அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.
ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம்.
இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களைத் தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.


நன்றி : தினமலர் 

Wednesday, 25 April 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013



17.5.2012 வியாழன் மாலை 6.15 மணிக்கு குருபகவான் மேஷ இராசியில் இருந்து இருந்து ரிஷப இராசிக்கு கிருத்திகை நட்சத்திரதில் சூரியன் சாரத்தில் பெயர்ச்சியாகிறார்.

குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும்.
பல கல்வி நிறுவனங்கள் உருவாகும். சப்தமத்தில் கூட்டு கிரகம் இருப்பதால், விரோதிகள் வீழ்ச்சி அடைவார்கள். போதும் போதும் என்ற அளவுக்கு மழை பொழியும். சில இடங்களில் வெள்ள பெருக்கும் ஏற்படலாம். குருவும், கேதுவும் ரிஷபத்தில் இணைவது சாதாரண விஷயம் இல்லை. சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும். நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும்.
7-ல் குரு – சூரியன், சுக்கிரனோடும், கேதுவுடனும் இணைந்து இருப்பதால் கடல்மார்க்கமாக இருந்து வரும் பிரச்னை தீர்வு பெறும். 10-ல்செவ்வாய் இருப்பதால் தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். பவர்கட் எல்லாம் இனி குரு அருளால் நெவர் கட் (Never Cut) ஆகிவிடும். சிம்மத்தில் செவ்வாய் இருப்பதால் அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். அரசாங்கம் செய்பவர்களுக்கு அதிகமான பலம் ஏற்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடுக்கு அதிபதி செவ்வாய்.
செவ்வாய் கிரகபலத்துடன் இருப்பதால் பல நாடுகளுக்கு முன்னோடியாக – முன்னுதராணமாக தமிழ்நாடு திகழும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும். குரு பெயர்ச்சியின் லக்கினத்திற்கு 9-க்குரிய சந்திரன் 5-ல் இருப்பதாலும், அந்த சந்திரனை செவ்வாய் பார்வை செய்வதாலும், உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம். ஆண்களுக்கு இல்லையா? என கேட்கலாம்.
பொதுவாக சந்திரன், பெண்களை குறிப்பிடும் கிரகம். அதேநேரம் சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் சந்திரமங்களயோகத்தை பெண்களுக்கு அதிகமாக வழங்குகிறார். ஆகவே பெண்களுக்கு அதிக சக்தியை – ஆற்றலை சந்திரனும், செவ்வாயும் வாரி வழங்குவர்.
உலக நாடுகளுக்கு என்ன பலன்
உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும்.
கேதுவும் – குருவும் – சுக்கிரனும் – சூரியனும் இணைந்து இருப்பதால் முக்கியமாக சுனாமி தாக்குதல் அல்லது தண்ணீரினால் பெரும் பாதிப்புகள் சில நாடுகளில் நடக்கலாம்.
புரியாத நோய் நொடிகள் மக்களை பாதித்தாலும், குரு அருளால் தீர்வு பெறும். ஆக ரிஷப குரு, சூரியனின் சாரம் பெற்று இருப்பதால்,
பல நாடுகளில் அரசாங்க மாற்றம் ஏற்படும். அவதிப்பட்ட சில நாடுகளின் மக்கள் குரு அருளால் நிம்மதி அடைவார்கள். கேதுவுடன் குரு சேர்ந்ததால், தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும். ஆக இந்த 2012 -2013 குரு பெயர்ச்சி பலன்களை பார்க்கும்போது, 75%  நன்மையே – நன்மையே நன்மையே. வாழ்க வளமுடன்.
இப்போது உங்கள் இராசிக்குரிய குரு பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம் :-
மேஷம் : மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் மேஷ இராசிக்கு 2-ம் இடமான ரிஷபத்தில் அதாவது தன, குடும்ப வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது ஒரு அற்புதமான நேரமாகும். வாக்கு பலிதம் ஏற்படும். திடீர் தனவரவு வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு தடை நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும். உங்கள் இராசிக்கு 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடம் போன்ற இவ்விடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார்.
கடன்கள் அத்தனையும் தீரும். நோய் நொடிகள் அகலும். வழக்கு இருந்தால் சாதகமாக அமையும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். 10-ம் இடத்தை கரு பார்ப்பதால் உத்தியோக உயர்வு, புதிய தொழில் அமையும். அரசாங்க ஆதரவு வர வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய முயற்சிகள் அமோகமாக வெற்றி பெறும். ரியல் எஸ்டேட், கலைத்துறை, ஐ.டி நிறுவனம் இவற்றில் ஈடுபடுபவர்கள் நற்பலன் அடைவார்கள். நினைத்ததை நிறைவேற்ற குரு 2-ல் அமர்ந்துவிட்டார். இனி உங்களுக்கு பொற்காலமே.
ரிஷபம் : மே மாதம் 17-ம் தேதி குருபகவான் ரிஷப இராசியில் அதாவது உங்கள் ஜென்மத்தில் அமர்கிறார். அங்கிருந்து பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5-ம் இடம், களத்திரஸ்தானம் என்கிற 7-ம் இடம், பாக்கியஸ்தானம் என்கிற 9-ம் இடம் போன்ற இவ்விடங்களை பார்வை செய்கிறார். பொதுவாக “ஜென்ம குரு நன்மை இல்லை” என்பார்கள். ஆனாலும் உங்கள் ரிஷப இராசிக்கு குரு பகவான், 8 மற்றும்11 இடத்துக்கு அதிபதி. இவர் ஜென்மத்தில் அமர்ந்து கேதுவுடன் சேர்ந்துவிட்டதால் நன்மையே செய்வார். சொத்துக்கள் வாங்க வைப்பார். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பார்.
திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் யோகத்தை உண்டாக்க செய்வார். கூட்டு தொழில் அமைய வழி செய்வார். தெய்வகாரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாக்குவார். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும், அதனால் பலனும் கிடைக்கச் செய்வார். உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜவுளித்துறை, ஏஜென்ஸி விவகாரம், மருந்து பொருட்கள் வியபாரம் போன்றவை சிலருக்கு அமோக நன்மை கொடுக்கும்.
மிதுனம் : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் மிதுன இராசிக்கு 12-ல் குரு பெயர்ச்சி ஆகிறார். குரு அமர்கிற இடம் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் என்பதால் நல்லது இல்லை என்பது பொது பலனாக இருந்தாலும், நான் உறுதியாக கூறுகிறேன் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மைதான் செய்யும். காரணம், 7 மற்றும் 10-ம் இடத்துக்கு அதிபதி அதாவது கேந்திராதிபதி எப்போதும் கெட வேண்டும். உங்கள் இராசிக்கு குரு கெட்டவன். ஆகவே 12-ல் அமர்ந்த குரு யோகத்தை கொடுப்பான்.
வியக்க வைக்கும் வாய்ப்பை தருவான். வெளிநாடு வேலைக்கு காத்திருந்தவர்கள் விமான பயணத்திற்கு தயாராக வேண்டிய காலம். தடைபட்ட கல்வி வெற்றி பெறசெய்யும். உடல்நலனில் இருந்த பிரச்னை குணமாகும். நீண்ட நாட்களாக இருந்துக் கொண்டிருந்த வழக்கு சமரசம் ஏற்படும் அல்லது வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
மனக்குழப்பம் தீரும். முக்கியமாக வண்டி வீடு அமையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் அமைப்பை குரு பகவான் ஏற்படுத்துவார். இதுநாள்வரை கடன் தொல்லையில் இருந்தவர்களுக்கு, கடனை காணாமல் போகச் செய்து விடுவார் குரு. ஆகவே மிதுன இராசி நேயர்களே 12-ல் குரு பெயர்ச்சி என்பதால் பயமே வேண்டாம். எழுதியர்கள் சிலர் ஏட்டை கெடுத்து விட்டார்கள். அதனால் கவலை வேண்டாம். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யும்.
கடகம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குருபகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடம் என்கிற லாபத்தில் அமர்ந்து விட்டார். கேட்கவே வேண்டாம். நினைத்தது எல்லாம் கைக்கு வரும். 11-ம் இடம் லாபஸ்தானம். ஆகவே சர்க்கரை என்று சொல்வதற்கு முன்பே கைக்கு சாக்லெட் வந்துவிடும். இது உண்மை. 11-ம் இடம் யோகஇடம். உங்கள் இராசிக்கு 6-ம் இடம் மற்றும் 9-ம் இடத்திற்கு அதிபதி குரு, லாபத்தில் அமர்வதால் பழைய பிரச்சனைகள் தீரும். 3-ம் இடம் 5-ம் இடம் 7-ம் இடத்தை பார்வை செய்வதால் கீர்த்தி ஏற்படும்.
எதையும் தைரியமாக சமாளித்து வெற்றி பெற செய்யும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பிள்ளைகளுக்கு திருமணம் பாக்கியம் தரும்.  எதிர்பாரா தனயோகத்தையும் கொடுக்கும்.  மனைவி வர்க்கத்தில் சில பிரச்னை இருந்தாலும் தீர்ந்து போகும். கூட்டு தொழில் அமைய வழி வகுக்கும்.
முக்கியமாக இதுநாள் வரை தெளிவு இல்லாமல் இருந்த மனம் தெளிவு பெற்று துணிச்சலாக எடுத்த காரியத்தை முடிக்க வைப்பார். 3-ம் இடம் சாதாரனமான இடம் இல்லை. தைரியத்தை கொடுக்கும் இடம். ஆகவே தைரியமாக எதையும் எடுத்து வெற்றி பெறுங்கள். அரசாங்கத்தால் லாபம் உண்டு. தண்ணீருக்கு தவித்த சிலர் பன்னீரில் குளிப்பார்கள். லாப குரு லாபத்தை வாரி வழங்கும்.
சிம்மம் : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு 10-ல் குரு வருகிறார். பொதுவாக 10-ல் குரு அமர்ந்தால் பதவி கெடும் என்று சிலர் பயமுறுத்தவர். ஆனால் உங்கள் இராசிக்கு குரு 10-ல் இருப்பது பெறும் நன்மை செய்வார். அது எப்படி என்றால்? உங்கள் இராசிக்கு 5-ம் இடம் மற்றும் 8-ம் இடத்திற்கு அதிபதி குரு கேதுவுடன் இணைந்து கெட்டான். அது மட்டுமல்ல. திரிகோணதிபதி கேந்திரம் அதாவது, 5-ம் இடத்து அதிபதி 10-ல் இருந்தால் மண்ணும் பொன்னாகும்.
உங்கள் இராசிக்கு 2-ம் இடம், நான்காமிடம், ஆறாம் இடத்தை குரு பார்வை செய்வதால், அதற்கரிய பலனாக திருமணம் பாக்கியம் தருவார், தனம் பெருக செய்வார், ஆயிரம் எதிர்பார்த்தால் பத்தாயிரம் கொடுப்பார். வண்டி வீடு – வசதி செய்து கொடுப்பார். 6-ம் இடம் சத்ருஸ்தானம். விரோதிகள் – வழக்குகள் அத்தனையும் பஞ்சு போல் காற்றில் பறக்கும். பிரச்சனைகள் அத்தனையும் தவிடுபொடியாகும்.
தடைபட்ட புதிய தொழில் கூட மலர ஆரம்பிக்கும். அன்னிய நபர்களால் உதவி கிடைக்கும். கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு வரும். பொதுவாக யாரும் எதிர்பாரா நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பைனாஸ், ரியல் எஸ்டேட், இரும்பு சம்மந்தபட்ட தொழில் லாபம் ஏற்படும். மடுவில் இருந்தவர்கள் மலைமீது நிற்பது நிச்சயம்.
கன்னி : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு 9-ல் அதாவது பாக்கியத்தில் குரு அமர்கிறார். சொல்லவே வேண்டாம். சொத்து சுகத்தை கிள்ளி கொடுத்தவர் இனி அள்ளி கொடுப்பார். உங்கள் இராசிக்கு குரு பகவான், சுகஸ்தானம் – களத்திரஸ்தானத்திற்கு அதாவது, 4-ம் இடம், 7-ம் இடத்திற்கு அதிபதி. அவர் பாக்கியத்தில் அமர்ந்து உங்கள் இராசியையும், 3-ம் இடத்தையும், 5-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். உடல்நல பாதிப்பில் இருப்பவர்கள் சுகம் பெறுவர்.
மற்றவர்கள் உங்களை புகழ்ந்து பேசும் அளவுக்கு வேலை செய்து கீர்த்தி பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இதுவரையில் மேல்படிப்பில் தடை இருந்தால் அத்தடை விலகும். எதிர்பார தனவரவு கைக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் அவை விலகி உங்களை நாடி வரும். மண் புழுவாக இருந்தவர் மலைப்பாம்பாக மாறினாரே என்ற சொல்லும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் தருவார்.
உங்கள் இராசிக்கு 3-ம் இடத்தை பார்வை செய்கிற குரு பகவான். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். சொத்து சுகங்கள் சேரும். மனைவியால் யோகம் அமையும். பெரியவர்கள் ஆசி கிடைக்கும். தெய்வகாரியங்கள் செய்யும் வாய்ப்பு தேடி வரும். பொதுவாக பாக்கியத்தில் அமர்ந்த குரு பகவான், Powerரான வாழ்க்கை தருவார்.. எண்ணெய் இரும்பு நவதானியம் போன்ற வியபாரத்தில் பெறும் நன்மை கொடுக்கும். சோகத்தை துரத்தி யோகத்தை கொடுக்கும் குரு பெயர்ச்சி இது.
துலாம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ல் அமர்கிறார். அதாவது அஷ்டமத்தில். “அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு” என்பார்கள். இன்னும் அஷ்டம குருவை பற்றி சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதை பற்றி கவலை வேண்டாம். 3-ம் இடம் மற்றும் 6-ம் இடத்திற்கு அதிபதி குரு பகவான். அவர் 8-ல் அமர்வதால் நன்மையே. கெட்டவன் கெட வேண்டும். “கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்.” அதனால் குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ல் இருந்து, 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடங்களை நோக்குகிறார்.
இந்த குரு பெயர்ச்சியில் தூர பயணம் செய்ய வைப்பார். வெளிநாட்டினர் தொடர்பு வரலாம். அல்லது அங்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் சுப செலவு ஏற்படும். கொடுக்கும் வாக்கை காப்பாற்றும் சக்தி கொடுப்பார். கைக்கு தனம் தேடி வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வழக்கு – ஜாமீன் விஷயங்களில் கவனம் தேவை. மேல் படிப்பு தொடர வாய்ப்புண்டு. கடன்கள் தீரும். மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு இருந்தாலும் நிவர்த்தியாகும்.
தள்ளிக் கொண்ட போன திருமணம் சிலருக்கு அமோகமாக முடியும். நண்பர்கள் உதவி கிடைக்கும். உங்கள் இராசிக்கு சுகஸ்தானப்படி வாகனம் – வீடு எதிர்பாராமல் அமையும். முக்கியமாக பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். பரபரப்பால் கைக்கு வருவதை விடடு விடவேண்டாம். அஷ்டம குரு ஆட்டி படைப்பான் என்ற கவலையே வேண்டாம். ஜவுளி, ஆபரணம், பெண்கள் அழகு சாதனம் போன்ற வியபாரங்கள் லாபம் தரும்.
விருச்சிகம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தமத்தில் அதாவது 7-ல் அமர்கிறார். குரு பகவான் உங்கள் இராசிக்கு தன பஞ்சமாதிபதி 2 – 5க்குரியவர். அவர் 7-ல் அமர்ந்து லாபஸ்தானம், ஜென்மஸ்தானம், கீர்த்திஸ்தானத்தை பார்வை செய்கிறார். உங்கள் தொழில் துறையில் செல்வாக்கு கூடும். புகழ் – கீர்த்தி அடைவீர்கள். காரியம் சாதிப்பீர்கள். எழுத்துத்துறையில் புகழ் பெறுவீர்கள். முக்கியமாக, களத்திரஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும். நண்பர்கள் உதவியால் கூட்டு தொழில் அமையும்.
புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாரா தனவரவு உண்டு. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். கடன் தீரும். மறுபடியும் தொழிலுக்கோ – சுபநிகழ்ச்சிகளுக்கோ சற்று கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். மேல்படிப்பு உத்தியோகம் வெற்றி பெறும். உயர் அதிகாரிகள் உதவி தானே கிடைக்கும்.
பெற்றோருக்கு உடல்நலம் சீராகும். பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், செங்கள், இரும்பு, எவர்சில்வர் வியபாரங்கள் லாபத்தை தரும். இதுவரையில் 6-ல் இருந்து அவஸ்தை கொடுத்த குருபகவான், சப்தமத்தில் (7-ல்) அமர்ந்து பல நன்மைகளை தருவான். எல்லாம் நலமே.
தனுசு : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 6-ல் அமர்கிறார். 6-வது இடம் ரோகஸ்தானம். அங்கு அமரலாமா? தவறில்லை. அது எப்படி என்றால், அதாவது கேந்திராதிபதி கெட வேண்டும். உங்கள் இராசிக்கு குரு பகவான், ஜென்மாதிபதி மற்றும் சுகாதிபதி. அதன்படி குரு உங்களுக்கு கேந்திராதிபதி. கேந்திராதிபதி கெட வேண்டும். அப்போதுதான் யோகத்தை கொடுப்பான். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்.” கவலையே வேண்டாம்.
சொத்து விவகாரங்களில் தொல்லை, கடன் தொல்லை, பிடுங்கி எடுத்த வியாதி அத்தனையும் தூசு போல பறந்து விடும். உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், உயர் பதவி கிடைக்கும். . சரியான வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும், புதிய தொழில் அல்லது செய்யும் தொழிலில் லாபமும் தரும். சொந்த தொழில் செய்பவர்கள் அதில் முன்னேற்றம் பெற்று நல்ல தொழிலதிபதி என்கிற அந்தஸ்தை பெறுவீர்கள்.
செலவுக்கு மேல் வரவு கிடைக்கும். வாக்கு வன்மையால் உங்கள் பேச்சுக்கு பலர் கட்டுபடுவர். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகளும் சுமுகமாக தீர்ந்து, மறுமலர்ச்சி பெறும். பொதுவாக குடும்பஸ்தானத்தை குரு பார்ப்பதால், திருமண வாழ்க்கை, குடும்பத்தில் சுபகாரியங்கள் பிரமாதமாக நடைபெறும். சிலர், “6-ல் குரு அவஸ்தை கொடுப்பான்” என்று கூறுவார்கள். என் ஜோதிடகணிதப்படி, உங்கள் இராசிக்கு 6-ல் அமர்ந்த குரு பகவான் அள்ளி தருவார். ஜவுளி தொழில், நவரத்தின வியபாரம், மின்பொருள் தொழில் லாபமாக அமையும்.
மகரம் : 2012 மே மாதம் 17-ம் தேதி குரு பகவான், உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5- ல் பெயர்ச்சியாகிறார். 3 – 12 க்குரிய குரு, 5-ல் அமர்ந்து ஜென்மத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பழைய வீட்டை புதுபித்தல், வாடகை வீட்டில் வசதி இல்லாத வாழும் சிலர், சொந்த வீடு வாங்கும் யோகத்தை பெற போகிறீர்கள். எதிர்பாரா தனவரவு, தேவையான பணவசதி கிடைக்கும். பலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.
அரசாங்க ஆதாயம் உண்டு. தொழில்துறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். அதேசமயம் தேவை இல்லா செலவுகளும் வரும். மனதில் தன்னம்பிக்கை வளரும். முடியாத காரியத்தையும் முட்டிமோதி வெற்றி பெறுவீர்கள். சில காரியங்களில் என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? என்று குழம்பிக்கொண்டு இருந்த நீங்கள், அந்த குழப்பம் நீங்கி எளிதாக சாதித்து விடுவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். மேல்படிப்பு தடைபட்டிருந்தால் அதை படிக்கும் அருமையான காலம் இது.
மந்திர – தந்திரத்தால் காரியத்தை சாதிக்க 5-ல் இருக்கும் குரு, நல்ல ஐடியா கொடுப்பார். ஆகவே உங்கள் கையில் ரிமோட் இருக்கிறது. பகைவர்களையும் பணிய வைக்கலாம். விவசாயம், வாகன வியபாரம், சிமெண்ட், கெமிக்கல் இவைகளில் நல்ல வருமானத்தை வாரி வழங்கும். வளமான வசதிகள் ஏற்படும். கவலையே வேண்டாம்.
கும்பம் : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் (4-ல்) குரு பெயர்ச்சியாகிறார். தன – லாபாதிபதி அதாவது 2 – 11க்குரிய குரு பகவான், 4-ம் இடத்தில் அமர்ந்து 8,10,12-ம் இடங்களை அதாவது அஷ்டமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – விரயஸ்தானம் போன்றவற்றை பார்வை செய்கிறார். இடம் மாற்றம், பதவி உயர்வு ஏற்படலாம். வீடு – மனை வாங்கும் யோகம் உண்டாகும். பட்டப்படிப்பு தடையின்றி முடிக்கும் பாக்கியம் கிடைக்கும். தொழில் துறையில் நீங்களே ஆச்சரியம் படும்படி விறுவிறுப்பாக முன்னேறும்.
கடன் வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும். தேவை இல்லாமல் வம்பு செய்தவன் கூட வாலை சுருட்டிக்கொண்டு உங்கள் முன் நிற்பான். விரயங்கள் – சுபவிரயமாக ஏற்படும். திருமணம் – புதுமனை புகுதல், புத்திர பேறு போன்ற சுபசெலவுகள் ஏற்படும். பெற்றோர் உடல்நலம் சீரடையும். அரசாங்க விஷயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் சுமுகமாக தீரும்.  வங்கி உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு அதிகமாக ஏற்படும்.
புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு வரும். கம்ப்யூட்டர் சாதனம், பிளாஸ்டிக் வியபாரம், ஜவுளி வியபாரம், ஸ்டேஷ்னரி தொழில் லாபம் கிடைக்கும். குழம்பிய குட்டை போல் இருந்த வாழ்க்கை, ஸ்படிகம் போல தெளிவு பெறும். 4-ல் அமர்ந்த குரு, நலமான வாழ்க்கை தருவார்.
மீன ராசி : 2012 மே மாதம் 17-ம் தேதி உங்கள் இராசிக்கு ஜென்மாதிபதியும் – ஜீவனாதிபதியுமான குரு பகவான், உங்கள் இராசிக்கு மூன்றில் அமர்கின்றார். 3-ம் இடம் கீர்த்திஸ்தானம் என்று சொல்லக்கூடிய தைரியஸ்தானமாகும். நினைத்ததை உடனே முடிக்கும் ஆற்றல் கொடுக்கும். உங்களுக்கு உதவ பலர் முன் வருவர். உங்கள் இராசிக்கு 7,9,11-ம் இடங்களை அதாவது, சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் போன்றவற்றை குருபார்வை செய்வதால், நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் பிரமாதமாக நடக்கும்.
கணவன் – மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வாங்க வேண்டும் என தவித்த வீடு – மனை வாங்குகிற பாக்கியம் வந்தடையும். பெரும் பதவி வகிப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் பாக்கியம் உண்டாகும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தெய்வ அனுகிரகத்தால் உடல்நலம் சீரடையும். குடும்பத்தில் பாகப்பிரிவினை இருந்தாலும் ஓற்றுமை ஏற்படும். விரோதங்கள் விட்டில் பூச்சி போல் மறைந்துவிடும்.
மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். காண்டிராக்ட், மருத்துவதொழில் செய்பவர்கள், ஒட்டல் தொழிலில் இருப்பவர்கள் கை நிறைய பணம் அள்ளுவர். பொதுவாக மூன்றில் அமர்ந்த குரு, உங்கள் பகையாளிகள் மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு உங்கள் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உயர வைக்கும். மேன்மை தருவார் குரு பகவான்.

Thursday, 19 April 2012

திருசெந்தூர் செந்திலாண்டவன்


குரு பார்க்க கோடிநன்மை. குரு இல்லாத எந்த ஒரு செயலும் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இன்று வியாழகிழமை குருவிற்கு உகந்த நாள். ஜாதகத்தில்  குருபார்வை இல்லாதவர்கள் வியாழன் தோறும் தட்சிணா மூர்த்தி விளக்கேற்றி சுண்டல் மாலை அணிவித்து வணங்க வேண்டும் .மேலும் சமயம் கிடைக்கும்போது திருசெந்தூர் சென்று  செந்திலாண்டவனை மனதார வணங்குங்கள் . முதல் தடவை சென்று வந்தவுடன் சோதனைகள் நிறையவரும்  தாங்கிகொள்ளுங்கள். எல்லாம் அவனின் விளையாட்டு . மூன்று தடவைக்கு மேல் சென்று வந்தால் உங்களின் அணைத்து பிரச்னை களையும் செந்திலாண்டவன் முன் நின்று தீர்த்துவைப்பான். முக்கியமாக ரிஷப ராசிக்காரர்கள் தொடர்ச்சியாக சென்றுவரவேண்டும் . இதோ கீழுள்ள செந்திலாண்டவன்  படலை கேட்டுவிட்டு உடனே கிளம்புங்கள். அவன் அருள்பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஓம் சரவண பவ! 

Tuesday, 17 April 2012

புதிய RnB பாடல்கள்



இசைக்கு நாடு மதம் மொழி என்று எந்த வேறுபாடும் கிடையாது இதோ கீழுள்ள புதிய RnB பாடல்களை கேட்டு மகிழுங்கள் இசைக்குத்தான் மனதை உடலை மகிழ்ச்சி படுத்தும் ஆற்றல் உண்டு .

புதிய RnB பாடல்கள் 

Saturday, 14 April 2012

பொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்


தினமலருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் முக்கிய கோவிலை உங்களுக்கு அறிமுக படுத்துவதில் பெருமை அடைகிறேன்.  சிவனின் அருள் உங்கள்ளுக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் . ஓம் நமசிவய போற்றி!

பட்டுக்கோட்டை அருகே பரக்கலாக்கோட்டை மத்தியபுரீஷ்வரர் கோவில் கருவறை பொங்கல் திருநாளில் மட்டுமே திறந்து வழிபாடு நடத்தப்படுகிறது.




















பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில், பரக்கலாக்கோட்டை மத்தியபுரீஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தல வரலாறு சற்று வித்தியாசமானது.இங்கு வசித்து வந்த வான்கோபர், மஹாகோபர் என்ற இரண்டு முனிவர்களுக்கிடையே, இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? என விவாதம் ஏற்பட்டது. இருவரும் அவரவர் நிலையில் பிடிவாதமாக இருக்கவே, இருவரும் சிதம்பரம் நடராஜரிடம் தங்கள் விவாதத்தை முன்வைத்து முடிவு சொல்லும் படி கூறினர்.
அதை தொடர்ந்து, கார்த்திகை மாதம் நள்ளிரவு பூஜை முடிந்ததும், சிதம்பரம் நடராஜர், தன் பாரிவாரங்களுடன் பரக்கலாக்கோட்டையில் உள்ள வெள்ளை ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரண்டு முனிவர்களுக்கிடையே ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டார்."ஒரு மனிதனின் வாழ்வில் அவரவர் நிலையில் இல்லறம் மற்றும் துறவறம் இரண்டுமே நல்லறமாக இருத்தல் அவசியம்' என நடுநிலையான தீர்ப்பு கூறி மத்தியஸ்தம் செய்து வைத்ததால் மத்தியபுரிஷ்வரர் என்றும், பொதுவான தீர்ப்பை கூறியதால் பொதுஆவுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.வெள்ளை ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தீர்ப்பு கூறியதால், அந்த வெள்ளால மரமே கோவில் தல விருட்சமாக வழிபடப்படுகிறது. 

ஆலமரத்தை தல விருட்சமாக கொண்டு, இக்கோவிலில் மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் லிங்கம் போல் சந்தன அலங்காரம் செய்து, வழிபாடு நடத்துகின்றனர்.இந்த மரத்தின் முன் சிவன்பாதம் உள்ளது. சிவனின் குரு அம்சமான தட்சணாமூர்த்தி வெள்ளால மரத்தின் கீழ் காட்சி தருகிறார். 
இத்தலத்தை, குரு ஸ்தலமாகவும் கருதி வழிபடுகின்றனர். மரத்தின் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.பக்தர்கள் அந்த இலைகளை தங்கள் இல்லங்களில் பூஜையறையில் வைத்து வழிபடுகின்றனர். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் மட்டும் இரவு 10 மணிக்கு மேல் கருவறை திறக்கப்பட்டு, அலங்காரம் செய்து, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மஹாகோபர் மற்றும் வான்கோபர் ஆகியோருக்கு பூஜைசெய்து முடித்த பிறகே நள்ளிரவு 12 மணியளவில் மூலஸ்தனத்திலுள்ள சிவனை தரிசிக்க முடியும்.சூரியோதயத்திற்கு முன்பு கருவறை சாத்தப்படும், மற்ற அனைத்து நாட்களிலும் கோவிலின் கருவறை கதவு சாத்தியே இருக்கும். முடிய கதவிற்கு மட்டுமே தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்படும். மகர சங்கராந்தியன்று, சூரியன் இங்கு வந்து சிவனை தரிசித்துவிட்டு தனது உத்ராயன பயணத்தை துவக்குவதாக ஐதீகம்.இதனை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கலன்று மட்டும் வெள்ளால மரத்தின் மீது சூரியக்கதிர்கள் படும். அதற்காக அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை ஏழு மணிவரை நடைதிறக்கப்பட்டு இருக்கும். மத்தியபுரீஷ்வரர் கோவிலில் பொங்கல் வைத்த பிறகே ஊரில் மக்கள் அனைவரும் பொங்கல் வைப்பது வழக்கம்.சமூலஸ்தானத்தில் ஸ்வாமி அருகில் கஜலெட்சுமி காட்சி தருகிறாள். சிவனே பிரதானம் என்பதால் அம்பிகையோ, வேறு பரிவார மூர்த்திகளோ கிடையாது. கோயிலுக்கு வெளியே மேற்கு நோக்கிய வீராதி விநாயகர் சன்னதி இருக்கிறது. வான்கோபர் அலங்காரத்துடனும், மஹா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர்.

நன்றி: தினமலர் 





காதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல்


காதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல் 

தாய் மனசு படத்தில் வரும் இந்த பாடல் காதல் எண்ணத்தை இயற்கையில் இயல்பாகவே தூண்டுகிறது. ஒரே ஒரு முறை இந்த பாடலை கேட்டுபாருங்கள். உண்மை என்றால் தயவு செய்து உங்கள் விமர்சனத்தை கூறுங்கள்.




Tamil Movie Song - தாய்  மனசு   - தூதுவளை.

Friday, 13 April 2012

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்


தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்




மேஷ ராசி
நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிட்டும். சுற்றியுள்ளவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள் கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்- நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவர். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆனால் 12.9.12 முதல் வருடம் முடியும் வரை 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு விபத்துகள், பண இழப்புகள் வந்து போகும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.10.12 முதல் 15.11.12 வரை சூரியன் சனியுடன் சேர்ந்து இருப்பதால், அந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கவனம் தேவை. 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது நிற்பதால் தலைச்சுற்றல், முன்கோபம், ஒருவித சலிப்பு வந்து நீங்கும். 2.12.12 முதல் 7-ல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில்... வைகாசி, ஆனி மாதங்களில் பற்று- வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவர். புது சலுகைகளால் போட்டியாளர்களைத் திகைக்க வைப்பீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். சங்கத்தில் உங்களுக்கென்று தனியிடம் உண்டு. மருந்து, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. வருட ஆரம்பம் முதல் 11.9.12 வரை 6-ல் சனி நீடிப்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர் ஆவார்கள். 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் பங்குதாரர்களுடன் அவ்வப்போது கருத்து மோதல்கள் வரக்கூடும். கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான மனக்கசப்புகள் விலகும். 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் வேலைப்பளு குறையும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் புதிய பொறுப்புகள் சேரும். சம்பளம் உயரும். எனினும் 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் அலுவலகம் மற்றும் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்குமுன் யோசிப்பது நல்லது. கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும். அரசு கவுரவிக்கும். வீண் வதந்திகள் விலகும். கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். கல்யாணம் நடக்கும். வேலை கிடைக்கும். உயர்கல்வி அயல்நாட்டில் உண்டு. மாணவ- மாணவியருக்கு நினைவாற்றல் பெருகும்; கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவதுடன், அதிக மதிப்பெண் பெறுவீர்கள். மொத்தத்தில் நந்தன புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்! ******************************************************

ரிஷபம்
கடந்த கால நினைவுகளில் மூழ்கித் திளைப்பவர் நீங்கள். உங்களின் சுகாதிபதியின் நட்சத்திரத்தில் நந்தன வருடம் பிறக்கிறது. புதிய பாதையில் பயணிப்பீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். ஆனால், புத்தாண்டு 8-வது ராசியில் பிறப்பதால் அலைச்சல், உடல்நலக் குறை மற்றும் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் யோகம் உண்டு. அதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். 17.5.12 முதல் ஜென்ம குருவாக வருவதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். வேலைச் சுமை அதிகரிக்கும். உழைத்தும் பயனில்லையே எனும் ஏக்கம் வாட்டும். முக்கிய முடிவுகளைப் பலமுறை யோசித்து செயல்படுத்துங்கள். முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடலாம். 30.6.12 முதல் வருடம் முடியும் வரை ரோஹிணி நட்சத் திரத்திலேயே குரு செல்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம், யோகா போன்றவற்றில் நாட்டம் செலுத்துங்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க வழி கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆடி, ஆவணி மாதங்களில் வாரிசு உருவாகும். வரவேண்டிய பணமும் தக்க நேரத்தில் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டட வேலைகளையும் விரைந்து முடிப்பீர்கள். 23.6.12 முதல் 14.8.12 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். வருடத்தின் பிற் பகுதியில் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சகோதர-சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போவீர்கள். 11.9.12 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து சாப்பிடுவதை, தொலைதூர பயணங்களைத் தவிர்க்கவும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ஆம் வீட்டி லேயே தொடர்வதால், வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். 2.12.12 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால், முன்கோபம் நீங்கும். ஆனால் கேது 12-ல் நுழைவதால் வீண் செலவுகள் வேண்டாம். 2.12.12 முதல் 6-ஆம் வீட்டுக்கு ராகு வருவதால் வி.ஐ.பி-கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். அரசு விஷயங்கள் உடனே முடியும். சனியுடன் ராகு 2.12.12 முதல் 13.4.13 வரை நீடிப்பதால், எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி அதிரடி முடிவுகள் எடுக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் மதிப்பு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப் படும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கலைத்துறையினர், அரசால் கௌரவிக்கப் படுவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு. கல்யாணம் கைகூடும். மாணவ - மாணவியருக்கு மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வார்கள். அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். மொத்தத்தில் இந்த நந்தன வருடம் வேலைச் சுமையையும் அலைச்சலையும் தந்தாலும் பண வரவையும், புகழையும் தருவதாக அமையும்! ***************************************

மிதுனம்
எதையும் இலவசமாக ஏற்க விரும்பாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 7-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. திறமைகள் வெளிப்படும்; வேலை கிடைக்கும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். உங்கள் ராசியை சந்திரன் பார்க்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். செலவுகள் குறையும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு கூடும்.மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சித்திரை மாதத்தில் வழி பிறக்கும். சகோதரர்கள் உதவுவர். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வேலை அதிகரிக்கும். புகழ், கௌரவம் வளரும். சவாலான வேலைகளையும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 3-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளும், இதர வழக்குகளும் சாதகமாகும். சனி பகவான், 13.4.12 முதல் 11.9.12 வரை அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால், தாயின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வீண் பழிகளும் ஏற்படும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. கூடா நட்புகளைத் தவிர்க்கவும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண் டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். 12.9.12 முதல் சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரது சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். 2.12.12 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால் ஷேர் லாபம் தரும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். ராகு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். உங்களின் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். சிலர் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை 5-ஆம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் கர்ப்பிணிகள்... கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை மெடிஸ்கேன் மூலம் கண்காணிப்பது நல்லது கனமான பொருட்களை கவனமாகக் கையாளுங்கள் ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பண வரவு, திடீர் யோகம் உண்டு. வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். ஆவணியில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள்- உறவினர்கள் உதவியால், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் உண்டு. போட்டிகள் அதிகமாகும். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்பர். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளி நாட்டு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பங்குனியில் பதவி உயர்வு உண்டு! கலைஞர்களுக்குப் புகழ் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடா முயற்சி யாலும், தன்னம்பிக்கையாலும் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்! ************************************ 

கடகம் 
சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள். அலட்சியம் விலகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். வழக்குகளில் தேக்க நிலை மாறும். வருட முற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனத்தை உணர்த்துவதாகவும் அமையும். செவ்வாய் 2-ஆம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் கடுமை வேண்டாம். சேமிப்பு கரையும். ஆனாலும் புது வீடு- மனை வாங்கும் அளவுக்கு பணமும் சேரும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. தம்பதிக்கு இடையே சின்ன பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சொந்த வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். 17.5.12 முதல் வருடம் முடியும் வரை குரு லாப வீட்டில் அமர்வதால், உங்கள் கை ஓங்கும். ஷேர், ஸ்பெகுலேஷன் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். வங்கியில் கடனுதவி கிடைக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தம்பதிக்கு இடையே இருந்த வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் நீங்கும். வருடத்தின் முற்பகுதியில் புது வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்றுபோன பணிகள்... வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் முடிவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்-நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். 11.9.12 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 12.9.12 முதல் சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க நேரிடும். அரசாங்க வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகள் ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ல் கேது நீடிப்பதால் நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் போராடி முன்னேறு வீர்கள். 2.12.12 முதல் ராகு 4-ஆம் வீட்டுக்கு வருவதால் தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில், போட்டியாளர்களைத் திணறடிக்கும் வகையில் உங்களின் அணுகுமுறை மாறும். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் பணியை எல்லோரும் மதிப்பார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். 17.5.12 முதல் 10-ஆம் வீட்டை விட்டு குரு விலகுவதால், கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளைத் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி வந்து சேரும். பெரிய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகளும் தேடி வரும். வருடத்தின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; தை மாதம் கல்யாணம் நடக்கும். மாணவர்கள், எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த நந்தன வருடம், உங்களின் பண பலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்னை களுக்கு நல்ல தீர்வு தருவதாகவும் அமையும்! ****************************** 

சிங்கம் 
எதையும் ஆழமாக அலசி ஆராய்பவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும்போது, குரு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால், பண வரவு திருப்தியாக இருக்கும். உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. பழைய பிரச்னைகள், கடன்கள், வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு அழகான வாரிசு உருவாகும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். குழப்பங்கள், டென்ஷன் விலகும். சச்சரவுகள் குறையும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபகாரியங்கள் கூடிவரும். 17.5.12 முதல் குரு ராசிக்கு 10-ல் நுழைவதால், எடுத்த வேலையை கடுமையான முயற்சிக்குப் பிறகே முடிக்க முடியும். வீண் பழி, ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். எவரை நம்பியும் எந்தப் பணியையும் ஒப்படைக்காதீர்கள். திடீர் பயணம், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஆனி, தை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் ராசிக்குள் அமர்ந் திருப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சகோதரர்களை நினைத்து சங்கடப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சனி பகவான் 11.9.12 வரை பாதச் சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால், பேச்சில் நிதானம்; கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எவரிடமும் வாக்குறுதி அளிக்காதீர்கள். 12.9.12 முதல் சனி 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு; அவ்வப்போது மனஸ்தாபமும் எழும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி, சரியாகப் பராமரியுங்கள். 2.12.12 முதல் ராகு 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். இரவு நேர - நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். மார்கழி யில் அரசு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும். அரசியல்வாதிகள், தலைமையைப் பகைக்க வேண்டாம். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். புது போட்டியாளர்கள் வருவர். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டு. தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். 17.5.12 முதல் குரு 10-ல் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச் சுமை உண்டு. சின்ன சின்ன அவமானங்களால் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்து போகும். விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றப் படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கலைஞர்கள், சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். கன்னிப் பெண்கள், புதிய நண்பர்களிடம் கவனமுடன் இருக்கவும். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் வளர்ச்சி மற்றும் பிள்ளைகளால் நிம்மதி ஆகியவற்றைத் தருவதாக அமையும்! *********************** 

கன்னி 
வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. நீங்கள், பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் திருமணத் தடை நீங்கும். வருடம் பிறக்கும்போது குரு 8-ல் நிற்பதால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங் களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவீர்கள். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 12-ஆம் வீட்டில் தொடர்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரும். சொத்து விவகாரங்களில் ஏமாற்றம் வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.5.12 முதல் குரு 9-ல் அமர்வதால் எதிர்பாராத பண வரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. சேமிக்கத் துவங்குவீர்கள். ஆடி, புரட்டாசி மாதங்களில் சிறு சிறு விபத்து, காய்ச்சல், சளித்தொந்தரவு வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவார்கள். அண்டை வீட்டாருடனான சச்சரவுகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ஜென்மச் சனியாக இருப்பதால் சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 12.9.12 முதல் பாதச்சனியாக தொடர்வதால் திடீர் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பொங்குசனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 2.12.12 முதல் ராகு உங்கள் 2-ஆம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். எவரை நம்பியும் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். ராசிக்கு 8-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். இரவு நேர பயணங்கள் வேண்டாமே. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று, சில முக்கியஸ்தர் களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி மற்றும் கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் பதவி உயர்வு கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். உங்கள் மீதான பொய் வழக்கு தள்ளுபடியாகும். அயல் நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலைவாய்ப்பும் தேடி வரும். கலைஞர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவர். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். ஏழரைச் சனி தொடர்வதால், கன்னிப் பெண்கள் எதிலும் கவனமுடன் செயல்படவும். கல்யாணத் தடை விலகும். தடைப்பட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் சமயோசிதமாகச் செயல்படுவது நல்லது. கவிதை- கட்டுரைப் போட்டி களில் பரிசு வெல்வீர்கள். உயர்கல்வியிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும்! ********************************************** 

துலாம் 
கனிவான பேச்சால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் நந்தன ஆண்டு பிறப்பதால், முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. நிர்வாகத்திறன் கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு. வீடு கட்டுதல், நண்பர்-உறவினர் வீட்டு விசேஷங்களால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. சகோதரர்களுக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும். ஆவணியில் சுப நிகழ்வுகள் கூடிவரும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருட மத்தியில் சொத்துப் பிரச்னை தீரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். பழைய பிரச்னைகள் விலகும். 17.5.12 முதல் குரு 8-ல் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். சிலரது சதியால் சொத்தை இழக்க நேரிடும். எதிலும் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். ஆவணி யில் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். மாசி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களுடன் கருத்து வேறுபாடும் வந்து போகும். பங்குனி மாதத்தில் அரசால் ஆதாயம் உண்டு. ஆனால், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிறுசிறு விபத்துகள், மனைவிக்கு உடல்நலக்குறை ஏற்படும். வருட மையப் பகுதியில் வீடு மாறுவீர்கள். வருட ஆரம்ப முதல் 11.9.12 வரை விரயச் சனி நடைபெறுவதால், தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். செலவுகளும் உண்டாகும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி. எனவே, பெரிய நோய் இருப்பதாக எண்ணுவீர்கள். நடைபயிற்சி அவசியம். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும். கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் மிக நல்லது. 2.12.12 முதல் கேது 7-ல் அமர்வதால், மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது வரும். ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல், முன்கோபம் வந்துபோகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடிகள் நீங்கும். சக ஊழியர் களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சில நேரம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கவும் நேரிடலாம். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பு. மூத்த கலைஞர்களைப் பகைக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணத் தடை நீங்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அவசியம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்கள் வளர்ச்சியை தங்குதடையின்றி தொடர வைப்பதாக அமையும். ******************************************************* 

விருச்சிகம் 
எந்த வேலையையும் உடனே செய்து முடிக்க நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. தன்னம் பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பால் காரியம் சாதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் களத்தில் இறங்கு வீர்கள். சித்திரை மாதம் செலவுகள் இருந்தாலும், அரசு காரியம் முடியும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிய ருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பதவிகள் தேடி வரும். 17.5.12 முதல் குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதலிடம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். அரசு பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டட வேலைகளையும் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். 12.9.12 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் டென்ஷன் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே சந்தேகங்கள் வரக்கூடும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஆவணி, தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எனினும், வீண் செலவுகள் வேண்டாம். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல், ரத்த அழுத்தம் வந்துபோகும். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால், நெருக்கடிகள் குறையும். பெரிய நோய் இருப்பது போன்ற வீண் பயம் விலகும். கேது 6-ல் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால், லாபத்தை பெருக்குவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். யாருக்கும் அதிக முன்பணம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்தியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது பங்கு தாரர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களை எதிரியாக நினைத்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றி பெற்று, நீங்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்பு உண்டு. கலைத்துறையினரை, அலட்சியப்படுத்திய நிறுவனமே மீண்டும் அழைத்துப் பேசும். வதந்திகள் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களுக்கு தோஷங்களால் தடைப் பட்ட கல்யாணம், நல்லவிதத்தில் முடியும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள், விளையாட்டை குறைத்து கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தேர்வில் மதிப்பெண் கூடும். மொத்தத்தில் இந்த நந்தன வருடம் முடங்கிக்கிடந்த உங்களை முதலிடத்துக்கு அழைத்துச் செல்வதுடன் புது வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்! ********************************************** 

தனுஷ் 
மனதுக்கு சரியெனப்பட்டதை தயங்காமல் செயல் படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. எதிர்ப்புகள் யாவும் அடங்கும். நீங்களும் வி.ஐ.பி ஆவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பண வரவு அதிகரிக்கும். எனினும், உங்கள் ராசியிலேயே நந்தன வருடம் பிறப்பதால், வேலை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட காரியங்கள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடனை அடைக்கும் வகையில் வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேல் இருந்த கோபதாபங்கள் விலகும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அம்மாவின் உடல்நலன் மேம்படும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வந்து போகும். 17.5.12 முதல் உங்கள் ராசிநாதனான குரு பகவான் 6-ஆம் வீட்டில் நுழைவதால், செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். கையிருப்பு கரையும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. ஆனி, ஆடி மாதங்களில் சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். எவரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். முன்கோபத்தைத் தவிருங்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வருங்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு சுபவேளை கூடிவரும். மார்கழியில் சற்றே உடல்நலக்குறைவும் அலைச்சலும் ஏற்படலாம். பணம் கேட்டு நச்சரிக்கும் உறவுகளிடம் உங்கள் நிலையை நயமாக எடுத்துச் சொல்லுங்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 10-ல் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். 12.9.12 முதல் 11-ஆம் வீட்டுக்கு சனி நுழைவதால், உத்தியோகத்தில் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். 2.12.12 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிட்டும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வர். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உங்களின் புதிய கடை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, பெட்ரோகெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். மாசி, பங்குனி மாதங்களில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதம் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழல் உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கலைத் துறையினரின் கனவு நனவாகும்; படைப் புகள் பாராட்டப்படும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்குக் கண்ணுக்கழகான கணவர் அமை வார். தடைப்பட்ட படிப்பைத் தொடர்வீர்கள். மாணவர் களுக்குப் பரிசு-பாராட்டு கிடைக்கும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அதிகச் செலவு, கடின உழைப்புக்கு உங்களை ஆட்படுத்தினாலும், வெற்றியையும் பெரும் புகழையும் பெற்றுத் தருவ தாக அமையும்! *************************************** 

மகரம் 
மன்னிப்பதில் மகத்தானவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பிரிந்த தம்பதியும் ஒன்றுசேர்வர். வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலை மாறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய மனிதர்கள் உதவுவார்கள். எனினும் உங்களின் 12-வது ராசியில் நந்தன வருடம் பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களிடம் பணம் அதிகமாக இருப்பதாகக் கருதி, பலரும் தொந்தரவு செய்வார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தையில், வைகாசி மாதம் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 8-ஆம் வீட்டில் தொடர்வதால், சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும். செலவுகளும், சொத்துப் பிரச்னைகளும், சிறு சிறு விபத்துகளும், விலையுயர்ந்த பொருட்களின் இழப்பும் வந்து போகும். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 5-ல் நுழைவதால் தாயாருடனான மனத்தாங்கல் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலையில் அமர்வீர்கள். வருமானம் உயரும். பழைய வீட்டை விற்று, புது வீடு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் விருப்பம் அறிந்து, செயல்படுவீர்கள். சகோதரர்களுடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். அம்மாவின் நெடுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். ஆனி மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பண வரவு உண்டு. வீடு- மனை சேரும். ஆடி மாதத்தில் வீண் செலவு, அலைச் சல், மனைவிக்கு உடல்நலக்குறைவு வந்து போகும். உடன் இருந்துகொண்டு உபத்திரவம் கொடுப்பவர்களை விலக்குவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அக்கம்பக்கத்தாரிடம் அந்தரங்க விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 9-ஆம் வீட்டுக்குள் நிற்பதால், கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 12.9.12 முதல் 10-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால், தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டுக்குச் செல்வதால், உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனாலும் பதவி, சம்பள உயர்வு உண்டு. 4-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபமும், சலிப்பும் மேலோங்கும். சில விஷயங்களை பலமுறை முயற்சித்து முடிப்பீர்கள். வியாபாரத்தில், தெளிவான முடிவெடுப்பீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக் கும். கடையை சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதிக்காமல் செலுத்துவீர்கள். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், வைகாசி அல்லது ஆனி மாதத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வேலை தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத் துறையினர், புகழ் அடைவார்கள்.அரசு விருது உண்டு. பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து வேலையிலும் சேர்வீர்கள். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. அதிக மதிப்பெண்கள் எடுப்பீர்கள். மொத்தத்தில் இந்த புத்தாண்டு பண வரவும், வாழ்வில் புதிய சகாப்தத்தை படைக்கும் வல்லமையை யும் தருவதாக அமையும்! **************************************************** 

கும்பம் 
மற்றவர்கள் உரிமையில் தலையிடாத பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. சோம்பல் நீங்கும். உள்ளமும் உடலும் மலர்ச்சியாகும். கடந்த வருட பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் நல்ல தீர்வுகள் உண்டு! தம்பதிக்கு இடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்கள் செயலில் கவனம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். 23.6.12 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ல் அமர்ந் திருப்பதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 17.5.12 முதல் குரு 4-ஆம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை, ஏமாற்றம், மன உளைச்சல், ரத்த அழுத்தம், தாயார் மற்றும் உறவினர் பகை வரக்கூடும். குடும்ப வருமானத்தை உயர்த்தப் போராடுவீர்கள். வாகன விபத்து ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ராசிநாதன் சனி பகவான் அஷ்டமத்துச் சனியாக வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். 12.9.12 முதல் 9-ஆம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால், தந்தையின் உடல்நிலை பாதிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். அரசியல்வாதிகள், மற்றவரை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். சொத்து விஷயங்களில் நிதானம் தேவை. பாதியில் நின்றுபோன கட்டட வேலைகளைப் பூர்த்தி செய்து, புது வீட்டில் குடிபுகுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டுக்குச் செல்வதால், தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்து போகும். கேது, ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடன் தீரும். தாம்பத்யம் இனிக்கும்.நவீன ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் போட்டியாளர் களை திகைக்கச் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். பங்குதாரர் களிடம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பது நல்லது. இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், பிடிப்பு ஏற்படும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்; சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்கள் மீது மதிப்பு கூடும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்தவிதமான முடிவும் எடுக்க வேண்டாம். மாணவ-மாணவியரின் நினைவாற்றல் கூடும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். நல்ல நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள். மொத்தத்தில் இந்த நந்தன வருடம்... பிரச்னைகள் மற்றும் செலவுகளில் உங்களைச் சிக்க வைப்பதாகத் தோன்றினாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும். *************************************************** 

மீனம் 
அடுத்தவரை வெற்றி பெற வைத்து அகமகிழ்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங் களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்கும் எண்ணம் வரும். புது வேலைக்கான முயற்சிக்குப் பலன் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். ஆடி மாதத்தில் பிள்ளை களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். மகளின் கல்யாணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார்; உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். ஆவணி மாதம் அரசு காரியங்கள் முடியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவல் ஆகும். சகோதர- சகோதரிகள் பாசமழை பொழிவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்று கடனை அடைப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற தருணம் வாய்க்கும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 6-ஆம் வீட்டில் நீடிப்பதால்... உங்களின் மாறுபட்ட அணுகுமுறை மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கால், பழைய பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். புறநகர் பகுதியிலாவது வீட்டுமனை வாங்கிவிடலாம் என்று முயற்சிப்பீர்கள். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால் சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில்தான் முடியும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். பழைய நண்பர்கள், உறவினர்களிடம் பகை ஏற்படலாம். வீட்டுக் கடன் தவணையை கட்டுவதில் சிரமம் ஏற்படலாம். அனுபவ அறிவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், வீண் கவலைகள் வந்து போகும். மனைவியின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். 12.9.12 முதல் அஷ்டமத்துச் சனியாக வருவதால் எதிலும் போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண் பழி, பணப் பற்றாக்குறை, தம்பதிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சாட்சி கையெழுத்திட வேண்டாம். காசோலை தரும்போது, வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பது நலம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். சில நேரம், பெரிய நோய் இருப்பது போல் தோன்றும். எனினும் பதற்றம் வேண்டாம். 2.12.12 முதல் கேது ராசிக்கு 2-ஆம் வீட்டுக்கு வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். ராகு 8-ஆம் வீட்டுக்கு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். தந்தையின் உடல் நிலை மேம்படும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.சனியின் போக்கு சரியில்லாததால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகள் வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதம் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்பு தேடி வரும். கலைஞர்களுக்கு, திறமைகள் வெளிப்படும்; கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள். கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பயில வாய்ப்பு கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவர்களுக்கு, கல்வியில் அலட்சியம் கூடாது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசு-பதக்கம் கிடைக்கும். விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பார்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தின் அவசியத்தை உணர வைப்பதாகவும் அமையும்!************************